×

ஆரோன் பிஞ்ச் 153* ரன் விளாசல் ஆஸ்திரேலியா அபார வெற்றி: ரிஸ்வான் சதம் வீண்

ஷார்ஜா: பாகிஸ்தான் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 115 ரன் விளாசினார். ஹரிஸ் சோகைல் 34, கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஜை ரிச்சர்ட்சன், கோல்டர் நைல் தலா 2, நாதன் லயன், ஆடம் ஸம்பா, ஆரோன் பிஞ்ச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, உஸ்மான் கவாஜா - கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 36.4 ஓவரில் 209 ரன் சேர்த்து அசத்தினர். கவாஜா 88 ரன் (109 பந்து, 8 பவுண்டரி) எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் இமாம் உல் ஹக் வசம் பிடிபட்டார். மேக்ஸ்வெல் 19 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஆரோன் பிஞ்ச் 153 ரன் (143 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷான் மார்ஷ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிஞ்ச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் முதல் போட்டியிலும் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.  ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி அபு தாபியில் நாளை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aaron Finch ,victory ,Vallal Australia Australia ,Riswan , Aaron Finch , Australia
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...