×

நக்சலைட்டுகள் மிகுந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

சென்னை:  உத்தரபிரதேச மாநிலத்தில் நக்சலைட்டுகள் மிகுந்த பகுதியில் உள்ள தந்தையிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவனை, காஞ்சிபுரத்தில் வசிக்கும் தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வேலை செய்தார். அப்போது, அங்கு  வேலை செய்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பிரதீப்குமார், மனைவியுன் கோபித்து கொண்டு, தனது 2வது மகன்  கார்த்திக்கை (7) அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவரை, உமாமகேஸ்வரி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் உமாமகேஸ்வரி புகார் செய்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூர் பகுதியில் பிரதீப்குமார், மகனுடன் இருப்பது தெரிந்தது.இதையடுத்து போலீசார், உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதிக்கு சென்று, அங்குள்ள போலீசார் உதவியுடன், நக்சலைட்டுகள் மிகுந்த கோரக்பூர் பகுதியில் இருந்த பிரதீப்குமாரை பிடித்து, அவரிடம் இருந்த சிறுவன்  கார்த்திக்கையும் மீட்டு காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். தொடர்ந்து, சிறுவன் கார்த்திக், தாய் உமாமகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Naxalites , From Naxalites, Delivered ,restored boy's, mother
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...