×

உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த 1 லட்சம் பறிமுதல்

பல்லாவரம்: மாங்காடு அடுத்த முகலிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத ₹1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  மாங்காடு அடுத்த முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏ.வி. நகர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய  ஆவணங்கள் இன்றி ₹1 லட்சம் எடுத்து செல்வது தெரியவந்தது.

விசாரணையில், காரில் இருந்தவர் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம்,  கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவிகுமார் (47) என்பதும், இவர் கட்டிடங்களின்  உட்புறங்களை அழகுபடுத்தும் தொழில் செய்து வருகிறார் என்றும்,  வேலை செய்யும்  ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க ₹1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காரில்  செல்வதாகவும் கூறினார்.   முறையான ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல்  செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 1 lakhs, car ,proper ,documentary
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...