×

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரின் லாவ போரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் சாலை மார்க்கமாக செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாரமுல்லா சாலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேரை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ரயீஷ் ஹரா, ஷாகித் பட் மற்றும் இஷாக் லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : militants ,Kashmir , militants, arrested, Kashmir
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...