×

முலாயம் சிங், அகிலேஷ் மீதான சொத்து குவிப்பு வழக்கு சிபிஐ 2 வாரத்தில் அறிக்ைக தர உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், மகன்கள் அகிலேஷ், பிரதீக் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் விஸ்வநாத் சதுர்வேதி. இவர் கடந்த 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், மகன் அகிலேஷ் யாதவ் அவரது மனைவி டிம்பிள் மற்றும் மற்றொரு மகனான பிரதீக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் முறைகேடாக சொத்துக்களை குவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. கடந்த 2012ம் ஆண்டு சிபிஐ விசாரணையை எதிர்த்து சமாஜ்வாடி தலைவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டிம்பிள் யாதவின் மேல்முறையீட்டு மனுவை ஏற்ற நீதிமன்றம் அவர் மீதான விசாரணையை கைவிடும்படியும் அவர் எந்த அரசு பதவியும் வகிக்கவில்லை என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் விஸ்வநாத் சதுர்வேதி தற்போது மீண்டும் ஒரு புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். முலாயம் சிங், அகிலேஷ் மற்றும் பிரதீக் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை தன்மை எந்த நிலையில் உள்ளது என சிபிஐ தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முலாயம் சிங், அவரது மகன்கள் அகிலேஷ், பிரதீக் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mulayam Singh ,Akhilesh ,CBI ,Supreme Court , Mulayam Singh, Akhilesh, Supreme Court,
× RELATED அகிலேஷ் வேட்பு மனு தாக்கல்