×

புயல் வந்தால் வரமாட்டார்; தேர்தல் வந்தால் வருவார் பணக்காரர் வீட்டு காவலாளி மோடி: கமல்ஹாசன் காட்டம்

கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகவிழா நேற்று இரவு நடந்தது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கலந்துகொண்டு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 18 பேரை அறிவித்தார். வேட்பாளர்கள் விபரம்: பொன்மலை- பூவை ஜெகதீசன், பெரம்பூர்- பிரியதர்சினி, திருப்போரூர்- இந்திய குடியரசு கட்சியின் கருணாகரன், சோளிங்கர்- இந்திய குடியரசு கட்சியின் மலைராஜன், குடியாத்தம்- இந்திய குடியரசு கட்சியின் வெங்கடேசன், ஆம்பூர்- நந்தகோபால், ஒசூர்- ஜெயபால், பாப்பிரெட்டிபட்டி- நல்லதம்பி, ஒசூர்- குப்புசாமி, நிலக்கோட்டை- சின்னதுரை, திருவாரூர்- அருண்சிதம்பரம், தஞ்சாவூர்- வளரும் தமிழக கட்சி வேட்பாளர் துரையரசன், மானாமதுரை- ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி- வளரும் தமிழகம் கட்சி தங்கவேல், பெரியகுளம்- பிரபு, சாத்தூர்- சுந்தரராஜ், பரமக்குடி- உக்கிரபாண்டியன், விளாத்திகுளம்- தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர் நடராஜ்.

இதேபோல் மக்களவைக்கு போட்டியிடும் 19 பேர் கொண்ட 2வது பட்டியலை கமலஹாசன் வெளியிட்டார். வேட்பாளர்கள் விபரம்: காஞ்சிபுரம்- தங்கராஜ், திருவண்ணாமலை- அருள், ஆரணி- ஷாஜி, கள்ளக்குறிச்சி- கணேஷ், நாமக்கல்- தங்கவேலு, ஈரோடு- சரவணக்குமார், ராமநாதபுரம்- விஜயபாஸ்கர், கரூர்- ஹரிகரன், பெரம்பலூர்- அருள்பிரகாசம், தஞ்சாவூர்- சம்பத் ராமதாஸ், சிவகங்கை- கவிஞர் சினேகன், மதுரை- அழகர், தென்சென்னை- ரங்கராஜன், கடலூர்- அண்ணாமலை, விருதுநகர்- முனியசாமி, தென்காசி- முனீஸ்வரன், திருப்பூர்- சந்திரகுமார், பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்தினம், கோவை - மகேந்திரன். கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: கோவையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில், கமலஹாசன் பேசியதாவது:

கடந்த தேர்தலில் குஜராத் மோடியா, தமிழகத்தின் லேடியா என ஓட்டு கேட்டார்கள். இன்று மோடிக்காக ஓட்டு கேட்கிறார்கள். 8 ஆண்டு ஆட்சியில் இருந்தவர்கள் மத்தியில், மாநிலத்தில் என்ன செய்தார்கள். பகலில் பெண்கள் குடிநீருக்காக காத்திருக்கிறார்கள். இரவில் ஆண்கள் மது குடிக்க நிற்கிறார்கள். காவலாளி என சொல்கிறார் பிரதமர். அவர் பணக்கார வீட்டிற்கு காவலாளி. ஏழைகள் பணக்காரர்கள் வீட்டிற்குள் செல்லாமல் தடுக்கும் காவலாளி. தேர்தல் வந்தால் 4 தடவை தமிழகம் வருவார். புயலில் பாதிப்பு ஏற்பட்டால் வரமாட்டார். இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. பல்லக்கில் ஏறி அமர்வதை விட சுமக்க நான் விரும்புகிறேன். ஊர் ஊராக பல்லக்கு தூக்கி செல்ல எனக்கு நேரம் வேண்டும். எனவே என் இலக்கு எதுவோ அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Modi ,Kamal Hassan Khatam , Storm, election, rich house makers, Modi, Kamal Hassan
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...