×

புதுவை எம்.எல்.ஏ.அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுவை எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், அசோக் ஆனந்த்.  இவரது தந்தை ஆனந்தன், கடந்த 2008ம் ஆண்டு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக  பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றது. அதன்படி விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.   ஆகியோர் ரூ.1 கோடியே 74 லட்சத்து 36 ஆயிரத்து 839க்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் புதுச்சேரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  குற்றம் சாட்டப்பட்ட அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., ஆனந்தன் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், தலா ஒரு  லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக குவிக்கப்பட்ட ரூ.1.74 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அசோக்கை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலகம் கடந்த நவம்பரில் அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் 13 உட்பிரிவு(2) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 109ன்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்துவை குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும் ஒரு ஆண்டு  சிறைதண்டனையும், ஒரு லட்சம் அபாராதமும் விதித்துள்ளது. ரூ.1 கோடியே 74 லட்சத்து 36 ஆயிரத்து 839 மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. எனவே 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8, இந்திய அரசியலமைப்பு சட்டம் 102 பிரிவு 14(1) மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963ன் படி அசோக் ஆனந்த், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம்  செய்யப்படுகிறார். என அறிவித்துள்ளது.

சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை அடுத்து அசோக் ஆனந்த் புதுவை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அசோக் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையில் தள்ளுபடி செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ashok Anand ,Chennai High Court , NEW DELHI, MLA ASSOACH ANAND, DISCLAIMER, CHENNAI HIGHLIGHTS
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...