×

கலப்பட உணவு விற்பனை விவகாரம் பிரபல ஓட்டல் செயல்பட தடை

பூந்தமல்லி: போரூர் டிரங்க் சாலையில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலில் கடந்த ஆண்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மசாலாப் பொருட்களின் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து திருவள்ளுர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த ஓட்டலுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் ஓட்டல் நிர்வாகம் இதுவரை அபராத தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளுர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கவிக்குமார் தலைமையில் வந்த அதிகாரிகள், நேற்று ஓட்டலுக்கு சீல் வைக்க முடிவு செய்தனர். அப்போது, ஓட்டல் நிர்வாகம் சார்பில் அபராத தொகை செலுத்தி விட்டதாக கூறி அதற்கான ஆவணங்களை காட்டியுள்ளனர். அதனை 2 நாட்களுக்குள் அலுவலகத்தில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதுவரை ஓட்டல் செயல்படக் கூடாது என்று தெரிவித்து விட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hotel , mix of food sales ban ,prohibited ,famous hotel
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...