×

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்

மும்பை: ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கவிருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. ‘மதராசப்பட்டினம்’ மற்றும் ‘தெய்வத்திருமகள்’ போன்ற  திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விஜய் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ‘பாகுபலி’ திரைக்கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜெயலலிதா இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றிகரமான பெண்மணி. அவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவும் அரசியல் ஜாம்பாவானாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gangana Ranawat ,Jayalalithaa , Kangana Ranaut ,Jayalalithaa ,Titled Thalaivi.
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...