×

இளைய தலைமுறையினர் ஏன் அவசியம் வாக்களிக்க வேண்டும்?

சென்னை: முதன்முதலாக வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறையினரிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுத்தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், பொதுத்தேர்தல்-மக்கள் தீர்ப்பு என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட கையேடு மற்றும் குறுந்தகட்டினை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹு சென்னையில் நேற்று வெளியிட்டார்.  பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேசியதாவது: தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வசதியாக  திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெறும் வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம், பேஸ் புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறையினரிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கையேட்டில், 2009 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள புள்ளி விவரங்கள் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் கையேட்டில் இடம்பெற்றுள்ள விவரங்கள்,  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் http://www.pib.nic.in என்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : generations , Younger generations, need to vote?
× RELATED சொல்லிட்டாங்க…