×

தேர்தலால் இலக்கை நிர்ணயிக்காத மர்மம் எஸ்ஜிஎஸ்டியால் 3 ஆயிரம் கோடி வருவாய் குறையும் ஆபத்து

* மது, பெட்ரோலை நம்பும் வணிக வரித்துறை
* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: கடந்தாண்டை காட்டிலும் எஸ்ஜிஎஸ்டி மூலம் 3 ஆயிரம் கோடி வருவாய் குறைவாக கிடைத்து இருப்பது வணிகவரித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி அமலால் மாநில வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில், ஆல்கஹால், பெட்ரோல் வரி விதிப்பின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி இழப்பை சரி செய்யலாம் என்று மாநில அரசு எண்ணியது. அதன்படியே, கடந்தாண்டில் 73,148 கோடி வருவாய் இலக்கை எட்டியது. இதில், எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்குகள் சேவை வரி மூலம்) 16,199 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் 7402 கோடி மட்டுமே வரி வருவாய் கிடைத்தது. மது மூலம் மட்டும் 36 ஆயிரம் கோடி எட்டியது. இதனாலேயே கடந்த 2016-17யை காட்டிலும் 5 ஆயிரம் கோடி கூடுதலாக வருவாய் இலக்கை அடைய முடிந்தது.  இந்த நிலையில், இந்தாண்டு வணிக வரித்துறை வருவாய் இலக்கு கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஜிஎஸ்டியால் அரசுக்கு எந்த அளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது வெளிப்பட்டு விடும் என்பதால், இந்தாண்டு வணிகவரித்துறை சார்பில் வரி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படவில்ைல என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு தற்போது வரை எஸ்ஜிஎஸ்டி (மாநில ஜிஎஸ்டி) மூலம் 13,925 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் கடந்த காலத்தை காட்டிலும் நேற்று முன்தினம் வரை 3 ஆயிரம் கோடி குறைவாக தான் கிடைத்துள்ளது. மேலும், ஐஜிஎஸ்டி மூலம் வருவாய் எவ்வளவு என்பது தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் மது, பெட்ரோல் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதால் கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு கூடுதல் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது. எனவே, கடந்தாண்டை காட்டிலும் குறைவாக வருவாய் கிடைத்தால் இழப்பீட்டு தொகையை கேட்டு பெறவும் வணிகவரித்துறை முடிவு செய்துள்ளது என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் மேலும், கூறும் போது, வணிக வரித்துறை சார்பில் மது, பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் வரி வருவாய் இழப்பு தமிழகத்திற்கு அதிகம் ஏற்படும். எனவே தான் தற்போது வரை எதிர்த்து வருகிறோம். இந்தாண்டு எஸ்ஜிஎஸ்டி வரி வருவாய் குறைவு என்றாலும், மது, பெட்ரோல் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election , mystery, target, election
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...