×

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க 26 முதல் 28ம்தேதி வரை வைகோ சுற்றுப்பயணம் : தயாநிதி மாறனை ஆதரித்து 27ல் பிரசாரம்

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ வரும் மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். வரும் 27ம் தேதி மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச் 26ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலாஜா, சோளிங்கர், பாணாவரம், பணப்பாக்கம், நெமிலி.

மார்ச் 27ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெரு, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெரு, தென்சென்னை தொகுதி வேட்பாளரை ஆதரித்து தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் (ஜோன்ஸ் ரோடு). மார்ச் 28ம் தேதி  மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர் ஆகிய இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,DMK ,Vaiko Tour ,promoters ,Dayanidhi Maran , Vaiko Tour, 26 to 28 May, vote , DMK alliance candidates
× RELATED ராயபுரத்தில் வேட்பாளர் கலாநிதி...