கொடநாடு சாவி முதல்வர் கைக்கு வராதா என்ன? அமைச்சர் கருப்பணன் லகலக…

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழக சுற்றுச்சூழல்துறை  அமைச்சர் கருப்பணன் பேசியதாவது:  அதிமுக வெற்றிக்கூட்டணி அமைக்கும் பணியானது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இரண்டு மணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டணி  அமைக்காமல் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்கக்கூடாது என இருவருக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஒரு வேளை கூட்டணி அமைப்பதில்  தோல்வியடைந்திருந்தால், இரண்டு மணிகளும் தொண்டர்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.   இந்தியாவிலேயே 5 நிமிடத்தில் அதுவும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்து ஒரு முதலமைச்சரை சந்திக்க முடியும் என்றால் அது தமிழக  முதலமைச்சராகத்தான் இருக்கமுடியும்.

தமிழகத்தில் உள்ள நான்கரை கோடி மக்கள் தொகையில் இதுவரை ஒரு கோடி மக்கள், தமிழக முதல்வரை  சந்தித்துள்ளனர். கொடநாடு கொலையில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும், கொடநாடு பங்களாவின் சாவிக்காகத்தான் கொலை நடந்ததாகவும்  புகார் கூறுகின்றனர். கொடநாடு சாவிதான் இலக்கு என்றிருந்தால் முதலமைச்சர் கைக்கு அடுத்த நிமிடமே வந்திருக்கும். இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.   தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு என்பதுகூட ஒரு அமைச்சருக்கு தெரியாமல் இப்படி உளறிக்கொட்டினால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என  விழாவிற்கு வந்த கூட்டணி கட்சியினர் புலம்பி தள்ளினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: