எம்ஜிஆருக்கு முதல் வெற்றி, இரட்டை இலையை பெற்று தந்த திண்டுக்கல்லுக்கு பெரிய பூட்டு போட்ட அதிமுக: பாமக நிற்பதால் உற்சாகத்தில் திமுக

திண்டுக்கல் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல் உள்ளிட்ட 6 தொகுதிகள் உள்ளன. கடைசியாக  நடைபெற்ற 2014 தேர்தல் அதிமுகவின் உதயகுமார் 5,10,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் காந்திராஜன் 3,82,617 வாக்குகள் பெற்று 2  வது இடத்தையும், தேமுதிகவின் கிருஷ்ணமூர்த்தி 93,794 வாக்குகள் பெற்று 3 வது இடத்தையும், காங்கிரசின் சித்தன் 35,632 வாக்குகள் பெற்று 4 வது  இடத்தையும் பிடித்தார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 3 முறையும், தமிழ் மாநில  காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் உதயகுமார் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  குறிப்பாக வைகையிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம், நிலக் கோட்டையில் வாசனை திரவியம் தொழிற்சாலை உள்ளிட்ட அவர் அளித்த எந்த  வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குடிநீர் பிரச்சனை, மணல் கொள்ளை, புதிய மருத்துவ கல்லூரி, வாசனை திரவிய தொழிற்சாலை,  திண்டுக்கல்லை மையமாக கொண்டு பல்வேறு நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகள் நகரின் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

திமுக சார்பில் வேலுச்சாமி, அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஜோதி முத்து ஆகியோர் இந்த முறை களத்தில் உள்ளனர். அதிமுக கோட்டையாக  கருத்தப்படும் தொகுதியாகவும், அதிமுக முதல் முதலில் வெற்றி பெற்ற ெதாகுதியாகவும் உள்ள திண்டுக்கல் தொகுதியை பாமகவிற்கு கொடுத்ததில்  அதிமுகவினர் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தொகுதியில் தான் முதன்முறையாக அதிமுக சார்பில் மாயத்தேவர் வேட்பாளராக நின்று  வெற்றி பெற்றார். எம்ஜிஆருக்கு இரட்டை இலையை பெற்றுத்தந்தார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு இடையிலான கோஷ்டி பூசலால்தான்  திண்டுக்கல் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று ெதாண்டர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் அமமுக வேட்பாளரும் அதிமுகவின்  வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாமக வேட்பாளருக்கு அதிமுகவினரின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லையாம். தோற்கும் தொகுதி என்று பாமகவிற்கு இந்த தொகுதியை  தாரைவார்த்து விட்டார்கள் என்றும் அதிமுகவினர் புலம்புகின்றனர். இதனால் திண்டுக்கல்லைப் பொறுத்தவரை அதிமுக மற்றும் பாமக  தொண்டர்களுக்கு பெரிய பூட்டாக போட்டு விட்டதால், தொண்டர்கள் சோர்ந்து விட்டனர்.

இதுவரை

1952    அம்மு சுவாமிநாதன்(காங்கிரஸ்)

1957    குலாம் முஹைதீன்(காங்கிரஸ்)

1962    செளந்தரம் ராமச்சந்திரன்

(காங்கிரஸ்)

1967    அன்புச்செழியன்(திமுக)

1971    இராஜாங்கம்(திமுக)

1973    மாயத்தேவர்(அதிமுக)

1977    மாயத்தேவர்(அதிமுக)

1980    மாயத்தேவர்(அதிமுக)

1984    கே.ஆர்.நடராஜன்(அதிமுக)

1989    திண்டுக்கல் சீனிவாசன்(அதிமுக)

1991    திண்டுக்கல் சீனிவாசன்(அதிமுக)

1996    என்.எஸ்.வி.சித்தன்(தமாகா)

1998    திண்டுக்கல் சீனிவாசன்(அதிமுக)

1999    திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக)

2004    என்.எஸ்.வி. சித்தன்(காங்கிரஸ்)

2009    என்.எஸ்.வி.சித்தன்(காங்கிரஸ்)

2014    உதயகுமார்(அதிமுக)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: