எந்த செலவும் என்னது இல்லை எல்லாமே கட்சி தான்... தென்சென்னை வேட்பாளர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

1 நீங்கள் நிறைய கட்சிக்கு போய் விட்டு வந்திட்டீங்க, இப்படி ஒவ்வொரு கட்சியாக தாவி கொண்டே இருப்பதற்கு என்ன காரணம்?

நமக்கு எல்லாம் பிடிக்கனும்ல. மனசுக்கு பிடித்தால் தானே இருக்க முடியும். எனக்கு இந்த கட்சி கொள்கை எல்லாம் பிடிச்சிருக்கு. அதனால தான்  சேர்ந்திருக்கேன்.

2 தென்சென்னை வேட்பாளரா நிற்கிறீர்கள். ஏற்கனவே கடன் வாங்கி கஷ்டப்பட்டு வருகிறீர்கள். இந்த நிலையில் எப்படி செலவு செய்ய போகிறீர்கள்?

வேட்பாளராக நிற்க வாய்ப்பு கிடைத்தது அதை நான் பயன்படுத்தி கொள்கிறேன்.  செலவு எல்லாம் கட்சியில் பார்த்து கொள்கிறார்கள். எந்த செலவும்  என்னது இல்லை. எல்லாமே கட்சி தான்.

3 கடன் கொடுத்தவர்களை மிரட்ட தான் நீங்கள் வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா? மேலும், மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்கவா வேட்பாளராக  நிற்கிறீர்கள்?

அதெல்லாம் தவறு. நான் எப்படி மிரட்ட முடியும். அவர்கள் தான் என்னை மிரட்டுகிறார்கள். நான் என்னுடைய எதிர்காலம் நலன் கருதி தான்  போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றாலும் சந்தோஷம் தான். தோல்வி அடைந்தாலும் சந்தோஷம் தான். அடுத்த வாரம் முதல் நான் பிரச்சாரத்தை  தொடங்கவிருக்கிறேன்.

4 கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களா?

இந்திய குடியரசு கட்சியின் (ராமதாஸ் அத்வாலே) மாநில துணை தலைவராக இருக்கிறேன். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும்  பிரச்சாரம் நிச்சயம் செய்வேன். கட்சியின் தேர்தல் அறிக்கை திங்கள் கிழமை வெளியாகிறது. அந்த அறிக்கையை வைத்து என்னுடைய பிரச்சார உரை  இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: