×

இம்முறையும் வாக்களிக்க வழியில்லை 3 கோடி வெளிநாட்டு இந்தியர்கள் ஏமாற்றம்

துபாய்: வெளிநாடுகளில் இந்தியர்கள் 3.10 கோடி பேருக்கு மேல் வாழ்கிறார்கள். இந்தியாவிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்கள் பல்லாண்டுகளாக ஆன்லைன் அல்லது மாற்று ஏற்பாடுகள் மூலமோ இந்திய தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை கோரி வருகிறார்கள். ஆனால் இன்று வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. வரும் தேர்தலிலும் இவர்கள் வாக்களிக்க முடியாத சூழலே உள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் இந்தியர்கள் அமெரிக்காவில் அதிகளவில் உள்ளனர். அங்கு 44 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள்  வசிக்கின்றனர் அடுத்ததாக சவூதி அரேபியாவில் லட்சத்திற்கு மேற்பட்டோரும், 3வதாக ஐக்கிய அரபு அமீரத்தில்  28 லட்சத்திற்கு மேற்பட்டோரும், மலேசியவில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் மற்றும் பலவேறு நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை மசோதா கடந்த கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறவில்லை. என்ஆர்ஐ-க்கள் ஆன்லைனில் வாக்களிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதுபோன்ற திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும் என்றால் தங்கள் சொந்த தொகுதிக்கு நேரடியாக வரவேண்டும் என்ற நிலையே நீடிக்கிறது

பல நாடுகள் தன் தூதரகங்களில், தனது நாட்டு மக்கள் வாக்களிக்கும் முறையை அமல்படுத்தி உள்ளது. ஆனால் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இது வரை இதனை செயல்படுத்தவில்லை. வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் இந்திய தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடைக்குமானால் தேர்தல் முடிவே மாறும். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நேரத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றபோது இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் என்ஆர்ஐ-க்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேர்தல் சமயமாக இருப்பதால் நடைமுறை படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் உச்ச நீதிமன்றத்தில் இக்கோரிக்கை ஏற்கப் படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக‌ வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வழி செய்யும் வகையில் பல்வேறு கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில்  2019 தேர்தலில் நிச்சயம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நிறைவேற்றபடாதது  அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians , 3 crore foreign Indians , disappointed,vote this time
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...