×

கோவை ஜி.எச்.சில் கடந்த ஆண்டில் 8,227 குழந்தைகள் பிறந்துள்ளது

கோவை: கோவை  அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 16.87 லட்சம் பேர் புறநோயாளிகளாக  சிகிச்சை பெற்றனர். மாதம்தோறும்  சராசரியாக 1.40 லட்சம் பேரும், தினமும் சராசரியாக  4,637 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். உள்நோயாளிகளாக கடந்த ஆண்டில் 5.69  லட்சம் பேர்  சிகிச்சை பெற்றுள்ளனர். 16,070 பெரிய அளவிலான ஆபரேஷன், 7,45,597 சிறிய அளவிலான ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி, காயம் அடைந்த  14,403 பேர், சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 8,227 குழந்தைகள் ேகாவை அரசு  மருத்துவமனையில் பிறந்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையுள்ள  காலத்தில்  அதிக குழந்தைகள் பிறந்திருப்பது தெரியவந்தது.

நோய்  பாதிப்பு, தற்கொலை முயற்சி, சாலை விபத்து போன்றவற்றில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டவர்களில், தினமும் சராசரியாக 19 பேர்  உயிரிழந்துள்ளனர். மாதந்ேதாறும் சராசரியாக 584 பேர் இறந்துள்ளனர். கோவை அரசு  மருத்துவமனையில் மாதந்தோறும் சராசரியாக 683  குழந்தைகளும், தினமும்  சராசரியாக 22 குழந்தைகளும் பிறப்பதாகவும் தெரியவந்துள்ளது. சராசரியாக, தினமும் 22  பிறப்பும், 19 இறப்பும் கோவை  அரசு மருத்துவமனையில் தொடர்கிறது. மாதந்தோறும் ‘டெத் ஆடிட் மீட்டிங்’ வாடிக்கையாக நடக்கிறது. நோய்  பாதிப்பு மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மீட்க  தேவையான  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதுபற்றி கோவை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில்,  ‘’நோய் பாதிப்பில் வருவோருக்கு அந்தந்த நோய்களின் தன்மைக்கு ஏற்ப, அதற்குரிய வார்டுகளில் தனிக்கவனம் செலுத்தி, சிகிச்சை  அளிக்கப்படுகிறது. நோய் முற்றிய நிலையில் வந்தால், கைமீறி சென்றுவிடுகிறது. எந்த நோயாக இருந்தாலும் சரி, ஆரம்ப நிலையிலேயே வந்தால்,  பூரணமாக குணப்படுத்த முடியும். இருப்பினும், நோயாளிகளின் உயிரிழப்பை தடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore GHS ,children , Coimbatore GH, 8,227 children
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...