×

அண்ணா பல்கலை. விழுப்புரம் உறுப்புக்கல்லூரிக்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும்: ஆசிரியர்கள் போர்க்கொடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விழுப்புரம் உறுப்புக்கல்லூரியில் புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் போர்க்கொடி  தூக்கியுள்ளனர்.  
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 16 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இந்நிலையில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முதல்வரை மாற்றக்கோரி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு  ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அண்ணா பல்கலைக்கழக விழுப்புரம் உறுப்புக்கல்லூரியில் தற்போது பொறுப்பு முதல்வராக இருப்பவர் 2010ம் ஆண்டு முதல் அந்த பதவியில் உள்ளார்.  அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி 3 ஆண்டுகள் மட்டுமே ஒருவர் கல்லூரி முதல்வராக இருக்க முடியும்.

அதனால் அண்ணா பல்கலைக்கழக விழுப்புரம் உறுப்பு கல்லூரியில் தற்போது முதல்வராக இருப்பவர் கல்வி, ஆராய்ச்சி பணிகளில் சிறப்பாக  செயல்படவில்லை. இதனால் எங்கள் கல்லூரி கல்வியில் பின்தங்கியுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக பணியில் உள்ள பொறுப்பு முதல்வருக்கு பதிலாக, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரையே கல்லூரி  முதல்வராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Brother ,university ,Villupuram , Brother of university Villupuram, teachers
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...