×

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முத்திரையிலிருந்து காங்கிரஸ் என்ற வார்த்தை நீக்கம்: மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினுடைய கட்சி முத்திரையிலிருந்து காங்கிரஸ் எனும் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து டிசம்பர் 22, 1997ல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசைத் தொடங்கினார். தொடக்கத்தில் இது மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் என அழைக்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்திய  தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்ஜியை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 21 ஆண்டுக்காலமாக தனது கட்சியின் முத்திரையில் காங்கிரஸ் எனும் வார்த்தையையும் சேர்த்து பயன்படுத்திவந்த மம்தா பானர்ஜி, கட்சி முத்திரையிலிருந்து தற்போது முதல் முறையாக அதை நீக்கியுள்ளார். திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் முகநூல் ஆகியவற்றிலும் காங்கிரஸ் சொல் நீக்கப்பட்டிருக்கிறது. புதிய லோகோவில் பச்சை நிறத்தில் இரட்டை மலர்கள் மற்றும் நீல பின்னணியுடன் திரிணாமுல் என்ற  பெயர் பச்சை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்போது, ஒரு வாரத்திற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எனும் பெயரில்,  எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மம்தா பானர்ஜி கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mamata Banerjee ,Action Against Trinamool Congress , Trinamool Congress, stamp, Congress, Mamata Banerjee
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...