×

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேச்சு;
இந்தியாவில் கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Weather Center , Tamilnadu, 2 days, heat, increase, weather center
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...