×

தமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி : மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய  காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் அறிவித்தது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை பல கட்டங்களாக தேர்வு ெசய்து அக்கட்சி அறிவித்து வருகிறது.

ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகம் உட்பட பிற மாநிலங்களையும் சேர்ந்து 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதன்படி, திருவள்ளுர் தொகுதி(தனி) ஜெயக்குமாரும், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் டாக்டர் விஷ்ணுபிரசாத்தும், கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனி தொகுதியில் ஈ வி கே எஸ் இளங்கோவன், விருதுநகரில், மாணிக்தாகூர், கன்னியாகுமரி தொகுதியில் எச் வசந்த்குமார் மற்றும் புதுச்சேரியில் வைத்்திலிங்கம் உள்ளிட்டோரது பெயர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Lok Sabha ,constituencies ,Tamil Nadu , Congress has annou,in Tamil Nadu
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...