×

ஆஸ்திரேலியவுக்கு 281 ரன் இலக்கு

ஷார்ஜா: பாகிஸ்தான் அணியுடன் ஷார்ஜாவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. ஷார்ஜாவில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது. இமாம் உல் ஹக் 17, ஷான் மசூத் 40, உமர் அக்மல் 48, கேப்டன் சோயிப் மாலிக் 11, பாஹீம் அஷ்ரப் 28 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.அபாரமாக விளையாடிய ஹரிஸ் சோகைல் சதம் விளாசினார். ஹரிஸ் 101 ரன் (115 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), இமத் வாசிம் 28 ரன்னுடன் (13 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia , Target of 281 runs , Australia
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை