×

சில்லி பாயின்ட்...

* சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடையே சென்னையில் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்களை, வரும் 26ம் தேதி ஆன்லைன் (in.bookmyshow.com) மற்றும் ஸ்டேடியத்தில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* துபாயில் லங்காஷயர் அணிக்கு எதிராக நடந்த டி10 போட்டியில் சர்ரே அணி வீரர் வில் ஜாக்ஸ் (20 வயது, இங்கிலாந்து) 25 பந்தில் சதம் விளாசினார். அவர் 30 பந்தில் 8 பவுண்டரி, 11 சிக்சர் உட்பட 105 ரன் எடுத்தார். ஸ்டீபன் பாரி வீசிய ஒரு ஓவரின் 6 பந்தையும் ஜாக்ஸ் சிக்சருக்கு தூக்கி மிரட்டியது குறிப்பிடத்தக்கது. 10 ஓவர் கிரிக்கெட்டில் (டி10) சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

* ‘சாப்’ கோப்பை மகளிர் கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் நேபாள அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணி தொடர்ந்து 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது.

* டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அணியும் சீருடையில் பெயர், எண் இடம் பெறுவதற்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

* மலேசியாவின் ஈபோ நகரில் இன்று தொடங்கும் 28வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : All Sports
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...