×

சீன தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி 47ஆக உயர்வு

பீஜிங்: சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. 90 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங்கில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. ஆலையில் இருந்த ரசாயனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த தீ விபத்தில் ஆலையில் வேலைசெய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சிக்கினார்கள். அவர்கள் வெளியே வரமுடியாமல் அலறி கூச்சலிட்டனர். இதனிடையே மளமளவென பரவிய தீ அடுத்தடுத்து இருந்த தொழிற்சாலைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 176 தீயணைப்பு துறை வாகனங்கள், 928 தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் சிக்கிய ஊழியர்களில் பலர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனிடையே 5 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ள அதிபர் ஜி ஜின்பிங், தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த 16 ஆலைகளில் தீ பரவி சேதமடைந்துள்ளது.  மேலும் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தொழிற்சாலை அருகில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு ெசல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Crash ,factory ,China , Crash in China factory, hike to 47
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...