வளைகுடா பகுதியில் வான் துளை

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் ஐன் (Al ain) மற்றும் ஓமன் நாட்டின் பைருமி எல்லை வான் பகுதியில்    திடீரென சுழல்போன்ற  பெரும்துளை தென்பட்டது. மேக கூட்டங்களின் நடுவே பெரிய பள்ளம் போன்று காணப்பட்டது. இப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது இதனை பலர் மற்றொரு உலகிற்கான வாயில்  என்றும் உலகிற்கான புதிய செய்தி, ஏலியன்ஸ் இறங்கும் வழி என்றெல்லாம் எழுத  தொடங்கிவிட்டனர். இது போன்று ஏற்கனவே  சில நாடுகளின் வான் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கிலத்தில் fallstreak hole  மேக கால்வாய் என்று அழைக்கப்படுகிறது என  வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்  2007ல் டெக்சாஸ் பகுதியிலும்,2008ல் ஆஸ்திரியா நாட்டிலும், 2010ல் அமெரிக்காவின் Oklahoma  ஒக்லமா பகுதியிலும், 2014ல் ஆஸ்திரேலியாவிலும்,சமீபத்தில் 2018 டிசம்பர் மாதம் இத்தாலியிலும் காணப்பட்டுள்ளது.

உயரத்தில் இருக்கும் மேகத்தில் ஏதோ ஒரு பகுதி அப்படியே உறைந்து விடும். இப்படி உறைந்து பனியான பகுதி, தன் அதீத எடை காரணமாக மேகத்திலிருந்து கழன்று விழும். இப்படி விழுவதால் அங்கு வட்டமாகவோ, நீள்வட்டமாகவோ ஒரு வெற்றிடம் தோன்றும் என்ற கருத்து சொல்லப்படுகிறது. ஆனால், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால்  இதுபோன்று நிகழும். வெப்பநிலை மாறுபாட்டால் ஏற்படும் இந்த நிகழ்வு 50 கிலோ மீட்டர் வரை காணப்படும். எனவே தேவையற்ற கற்பனைகளை பரப்ப வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். சர்வதேச அளவில் இது பற்றிய‌ ஆய்வுகள் தொடர்ந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: