×

மோடி பிரதமரானபின் இந்திய-அமெரிக்க உறவு அபாரம் தேர்தலுக்குப்பின்பும் மேம்படும் : வெள்ளை மாளிகை அதிகாரி பேட்டி

வாஷிங்டன்: ‘‘பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா  உறவு அபார  வளர்ச்சி அடைந்தது’’ என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறி யுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ ஆட்சி தனது 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்து அடுத்த தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் மோடி ஆட்சி காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவு எப்படியிருந்தது என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரியிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:
மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்றதில் இருந்தே இந்தியா-அமெரிக்கா உறவு உண்மையிலேயே அபாரமாக வளர்ச்சி அடைந்தது. அவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகை வந்தபின்பு இரு நாடுகள் உறவில் ஏராளமான அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

முதல் முறையாக இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை டெல்லியில் கடந்த ஆண்டு நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சமீபத்தில் அமெரிக்கா வந்து வெளியறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை சந்தித்து பேசியது இருதரப்பு உறவில் மைல் கல். இந்தியா-பாகிஸ்தான் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. நடைபெறவுள்ள பொது தேர்தலில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசுடன், நாங்கள் இணைந்து செயல்படுவோம் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா

அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள வெனிசுலா நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இங்கு இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை உலக நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதில் 3வது பெரிய நாடாக வெனிசுலா இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியா-அமெரிக்க உறவு குறித்து பேட்டியளித்த வெள்ளை மாளிகை அதிகாரி, ‘‘அமெரிக்காவுக்கு இந்தியா நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளது இந்தியா. வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,US ,Indo ,interview ,White House ,election , Modi-Prime Minister , Indo-US Relationship ,Reinforcement Elections
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...