×

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் டெல்லியில் கைது

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சஜத்கான், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிர் அகமது கானின்  நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்.14ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாகவே சஜத்கான் டெல்லி வந்ததாகவும், பிப்.14ம் தேதி தாக்குதல் நடக்கும் வரை மறைமுகமாக செயல்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் இன்று அவனை கைது செய்துள்ளனர். மேலும் சாஜித் கான் என்ற பெயரில் அவன் டெல்லியில் ஷால் விற்பனை செய்பவனாக வசித்து வந்துள்ளான். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலின் முழு விவரங்களும் அவனுக்கு தெரிந்திருந்தது. சஜத்கானுக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத இயக்கத்தில் இருந்தனர்.

ஆனால் அவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு சகோதரன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் உறவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சஜத்கான், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிர் கானுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்படுகிறது. முடாசிரின் கடந்த மார்ச்11 தேதி அன்று சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. முடாசிரின் என்பவன் புல்வாமா தாக்குதலுக்கு வெடிமருந்துகள் மற்றும் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளான். இதன் மூலமாக, புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமாக இருந்த அடில் அகமது தாக்குதலுக்கு முன்பு வரை முடாசிரினுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கைது செய்யப்பட்ட சஜத்கானிடம் விசாரணை நடத்தியதில் அவன், போலியான மொபைல் எண் மட்டம் ஆப் மூலமாக முடாசிரின் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி யாசிருடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sajat Khan ,Jaish-e-Mohammad ,attack ,Pulwama , Pulwama attack, Jaish-e-Mohammad, terrorist Sajat Khan, arrested
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...