×

பாலக்கோடு அருகே வறண்டு கிடக்கும் சின்னாறு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை, சராசரியை விட 40 சதவீதம் குறைவாக, அதாவது 253 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதலே வனப்பகுதி முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தெற்கே காவிரியும், மேற்கே தென்பெண்ணையாறும் ஓடுகிறது. இதன் நடுவே கர்நாடகா மலைப்பகுதியில் துவங்கி கிருஷ்ணகிரி வழியாக தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் வழியாக ஒகேனக்கல் அருகே காவிரியில் சின்னாறு நதி கலக்கிறது.

பருவமழை பொய்த்ததன் காரணமாக, சின்னாற்றில் தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது. சின்னாற்றை ஒட்டிய விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், மாமரங்கள், தக்காளி தோட்டம் உள்ளிட்ட அனைத்தும் காய்ந்து கருகி விட்டன. இதனால், பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : balcony , Dharmapuri, Palakkodu, cinnaru
× RELATED நானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்