×

தடை செய்யப்பட்ட குட்காவை விற்க மாமூல் வாங்கியது அதிமுக அரசு : ஸ்டாலின் காட்டம்

சேலம்: 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதை மக்களின் எழுச்சி காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர் கூறியுள்ளார். மேலும், சென்னை கோட்டையில் திமுக ஆட்சி உதயமாக போகிறது. சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டை என்றார். தடை செய்யப்பட்ட குட்காவை விற்க மாமூல் வாங்கிய அதிமுக ஆட்சி என சாடினார். விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின்சார் வழங்கியது திமுக ஆட்சி தான். மேலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கியதும் திமுக ஆட்சி தான் என்றார்.

ஊழல் மற்றும் கொலை குற்றச்சாட்டிற்கு ஆளாகி இருப்பவர் தற்போதைய முதல்வர் பழனிசாமி. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்றார். நான் தான் கடவுள் என்னும் பழனிசாமிக்கு, மணி அடிக்கும் பூசாரியாக ராமதாஸ் மாறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் கீழ்தரமாக அதிமுகவை வசைபாடிவிட்டு தற்போது அந்த கட்சியுடனே கூட்டணி சேர்ந்துள்ளார் ராமதாஸ் என சாடினார். திமுக ஆட்சியில் தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்தது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க உதயசூரியன் சின்னம் தான் வாய்ப்பு அளித்தது. அரசு மருத்துவ கல்லூரிகளை மாநிலத்தின் பல மாவட்டங்களில் துவக்கியது திமுக ஆட்சி தான். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஆனால் தாங்கள் ஊழலி்ல் திளைக்காதவா்கள் போல பிரதமரும், முதல்வரும் மக்களை மாறி மாறி ஏமாற்றி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். பேரத்தின் அடிப்படையில் தான் எதிரணியின் கூட்டணியே அமைந்துள்ளது என்றார். சேலத்தில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்படும். ஏற்கனவே உள்ள சென்னை - சேலம் சாலை மேம்படுத்தப்படும். சேலத்தில் இரவில் விமானம் தரையிறங்க வசதி செய்யப்படும். மேலும் மத்திய அரசு வேலைகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர திமுக வலியுறுத்தும் என்றார். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக அணி தான் வெற்றி பெறும். நாடும் நமதே நாற்பதும் நமதே என ஸ்டாலின் முழங்கினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,government , Gudka, Stalin, DMK, election campaign
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...