×

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் கே. நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் கே. நாராயணசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.  

புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மக்களவைத் தொகுதி வேட்பாளரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி அறிவித்தார். அரசியலில் இளைஞர்களுக்கு வழிவிடவே  டாக்டர் கே. நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக ரெங்கசாமி கூறினார். புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து தர வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார். தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று ரெங்கசாமி கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : K. Karunanidhi Narayanasamy ,NR ,constituency ,Congress ,Puducherry Lok Sabha ,announcement , Puducherry, Lok Sabha, AIADMK, NRKangres, Dr. K. Narayanasamy, AIADMK, Rengasamy
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...