×

தேர்தல் பறக்கும் படையினர் கெடுபிடி : ஈரோடு மாட்டு சந்தைக்கு வருவதற்கு தயங்கும் வெளிமாநில வியாபாரிகள்

ஈரோடு: தேர்தல் பறக்கும் படையினர் மாட்டு சந்தைக்கு மாடுகளை வாங்க வரும் விவசாயிகளிடம் பணம் பறிமுதல் செய்து வருவதால் வெளி மாநில வியாபாரிகள் மாட்டு சந்தைக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாடு வாங்க தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா பகுதியில் உள்ள வியாபாரிகள் வாரந்தோறும் வந்து வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் மாவட்டம் முழுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து சென்றால் அவற்றை பறிமுதல் செய்கின்றனர். கடந்த வாரம் நடந்த மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளிடம் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி அருகே ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்று ஈரோடு மாட்டு சந்தைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த கேரள வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், அவர்களிடம் தலா ரூ.52 ஆயிரம், ரூ.64 ஆயிரம், ரூ.67 ஆயிரம் என மொத்தம் ரூ.1.85 லட்சம் பறிமுதல் செய்தனர்.  

இதுகுறித்து ஈரோடு மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், சந்தைக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.கடந்த வாரம் பறிமுதல் செய்த பணத்திற்கான ஆவணத்தை விவசாயிகள் அதிகாரிகளிடம் செலுத்தி, பணத்தை பெற்று செல்ல 4 நாட்களுக்கு மேல் ஆனது. இதே போல், நேற்றும் கேரள வியாபாரிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் அதிகமாக வைத்திருந்தனர் என்பதற்காக ரூ.52 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால்,  வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஈரோடு மாட்டு சந்தைக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.’ என்றார்.

இதேபோல், பண்ணாரியை அடுத்துள்ள திம்பம் மலை அடிவாரம் வழியாக வந்த டெம்போவை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்த  ஈரோடு சுப்பிரமணிய நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (53) என்பவரிடம் இருந்த ரூ.1.23 லட்சம் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகாவில் சிப்ஸ் விற்பனை செய்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election ,Soldiers ,Kidipiti ,Traders , Elections, Flying Soldiers, Erode, Cow Market
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்