×

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம்: புதிய வேட்பாளராக மயில்வேல் அறிவிப்பு

சென்னை: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு பதில் மயில்வேல் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளன. அதில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 17ம் தேதி அதிமுக சார்பில் போட்டியிடும் மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், முருகன் மீது கட்சி பிரமுகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து மயில்வேல் என்பவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டுள்ளது. பெரியகுளம் வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பல்வேறு விதமான புகார்கள் அவர் மீது எழுந்தது. அது என்னவென்றால், பெரியகுளம் தொகுதிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை, அதேபோல பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்கவில்லை போன்ற பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது. இதன்காரணமாகத் தான் பெரியகுளம் தொகுதியில் வேட்பாளரை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் அதேசமயம் முரண்பாடுகளும் இருப்பதாக தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாகவே தற்போது பெரியகுளம் தொகுதியின் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Murugan ,constituency ,Periyakulam Assembly , Periyakulam, Assembly Constituency, Intermittent, Candidate, Change
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...