×

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எவ்வித தேர்தல் பிரச்சாரமும் அனுமதிக்கப்படாது: பேஸ்புக், ட்விட்டர் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எவ்வித தேர்தல் பிரச்சாரமும் அனுமதிக்கப்படாது என பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் அறிவித்துள்ளன. இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பு, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுள், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த 2 நாளாக டெல்லியில் நடைபெற்று வந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 106வது பிரிவின்படி தாங்களாக முன் வந்து இந்த நடத்தை விதிமுறைகளை பின்பற்றவுள்ளதாகவும் சமூக வலைதள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை மீறி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றாலும் அடுத்த 3 மணி நேரத்தில் அவை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தேர்தல் ஆதாயத்திற்காக சமூக வளைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படும் தேர்தல் செய்திகளை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இணையதள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறி தகவல்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகளை தேர்தல் நடத்தும் நாளில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக பதிவிடப்பட்டால் அதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தடை சான்றிதழ் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election campaign ,announcement , Polling, election campaign, Facebook, Twitter announcement
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...