×

சூடாக தேநீர் அருந்துவதால் புற்றுநோய் வர 90% வாய்ப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன் : சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ காலையில் எழுந்தவுடனே தேநீர் அருந்தினால் தான் மற்ற வேலையே செய்யும் அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றியுள்ளது. சூடு இல்லாமல் தேநீர், காபி குடிப்பவர்களின் எண்ணிக்கையோ மிக குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் சூடாக தேநீர் அருந்தினால் உணவுக்குழாயை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.

அதாவது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடாக தேநீர் அருந்துவதால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல நாள் ஒன்றுக்கு 700 மி.லி., தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவிகித அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 1,300 பேர் புற்றுநோயால் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் டீயோ, காபியோ குடிப்பதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமடைகின்றன.

இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க புற்றுநோய் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக 40 முதல் 75 வயதுக்குட்பட்ட சுமார் 50,045 பேரிடம் நடத்திய ஆய்வில், சூடாக தேநீர் அருந்துவதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுக்காக அருந்தும் தேநீராலும் கூட புற்றுநோய் ஏற்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதிக சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hot Tea, Cancer, American Cancer Society
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி