×

கொடிகட்டிப்பறக்குது தெலங்கானாவில் கட்சித்தாவல்: கை கழுவும் காரணம் என்ன?

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 16ல் வெற்றி பெற வேண்டும் என்று சபதம் எடுத்து காய்களை நகர்த்தி வருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ்.  
மாநிலத்தில் வீசும் அரசியல் சூறாவளியில் சிக்கி காங்கிரஸ் கதி கலங்கியுள்ளது. காங்கிரசில் இருந்து ஒவ்வொருவராக டிஆர்எஸ் கட்சிக்கும் பா.ஜ.வுக்கும் தாவி வருகின்றனர். காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் இனியும் அங்கு இருந்தால் தங்களது அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என்று தாவியவர்கள் கூறுகின்றனர். தெலங்கானாவில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.  இங்கு டிஆர்எஸ் கட்சிக்கு மட்டும்தான் செல்வாக்கு உள்ளது என்று மக்களுக்கு காட்டுவதில் ராவ் தீவிரமாக உள்ளார். கட்சி தாவலை ஊக்குவிக்கும் டிஆர்எஸ் மீது கவர்னரிடம் காங்கிரஸ் புகார் அளிக்க உள்ளது.

இந்த மாதம் மட்டும் காங்கிரசில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் சேருவதாக 8 எம்எல்ஏக்கள் அறிவித்துவிட்டனர். தற்போது கோலாபூர் தொகுதி எம்எல்ஏ ஹர்ஷவர்த்தன் ரெட்டி எம்எல்ஏ காங்கிரசில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தபேரவை தேர்தலில் காங்கிரஸ் 19 தொகுதியில் வென்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன.  பா.ஜ. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. பேரவையில்  காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் இருக்க வேண்டும் என்றால் குறைந்தது 12 எம்எல்ஏக்கள் தேவை. அதுவும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார்கள்
டிஆர்எஸ் எம்பி கவிதா: மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் என்றால் அவர்களை வரவேற்று சேர்த்துக் கொள்வோம். அப்போதுதான் கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது.
டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ்: அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கட்சி மாறுகின்றனர். முன்பு பல எம்பிக்கள் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லையா. அதுபோலத்தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Telangana , Telangana, Lok Sabha constituency, Chandrasekara Rao.
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...