×

உபி சரியில்ல ஹை... மபி.க்கு உமாபாரதி ஜம்ப்

மத்திய இணை அமைச்சர் உமாபாரதி உடல்நலக் குறைவால்தான் இந்த முறை உ.பி.யின் ஜான்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம் கஜிராஹோ தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக உமாபாரதியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சியின் மெகா கூட்டணியால் ஜான்சி தொகுதியில் அவர் வெற்றி பெறுவது கடினம் என்பதால் ஜான்சி தொகுதியை விட்டு ஏற்கனவே அவர் 4 முறை வெற்றி பெற்ற தொகுதியான மத்தியப் பிரதேச மாநிலம் கஜிராஹோ தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

கஜிராஹோ தொகுதியில் உள்ள அவரது லோதி சமூக ஓட்டுகளும்  இந்த தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதியான காரக்பூர் தொகுதியில் அவரது உறவினர் சித்தார்த் எம்.எல்.ஏ வாக இருப்பதாலும் எளிதில் வெற்றி கிடைக்கும் என்பதால் கஜிராஹோ தொகுதியை பெறும் முயற்சியில் உமாபாரதி ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ubai ,Umaparati ,MB , Ubai jumped hi ... Umaparati jump to the MB
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி