×

அமெரிக்காவில் நீதிபதியாக இந்திய பெண் பொறுப்பேற்பு

வாஷிங்டன்:  அமெரிக்காவின் சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதியாக  இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியோமி ஜஹாங்கீர் ராவ் பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக  சர்க்கியூட் நீதிமன்றம் இயங்கி வருகின்றது. கொலம்பியாவின் சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் நியோமி ஜஹாங்கீர் ராவ் கடந்த நவம்பரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த செனட் சபையில் நடந்த தேர்தலில் 5,346 வாக்குகளை பெற்று நியோமி ஜஹாங்கீர் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதியாக நேற்று அவர் பொறுப்பேற்றார். வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைசேர்ந்த னிவாசன் பதவி வகித்து வருகிறார். அவருக்கு பின்னர் இரண்டாவதாக அதிகாரம் மிக்க சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதியாக நியோமி ஜஹாங்கீர் ராவ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,United States , Indian woman,judge i, United States
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...