இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் இன்னொரு முறை நடந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியா மீது பாகிஸ்தான் இன்னொரு முறை தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கொந்தளிக்கும். இதனால் விளைவு மிக மோசமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அங்கிருந்த தீவிரவாத முகாமை அழித்தது. இதையடுத்து மறுநாள் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அப்போது இந்திய விமானப்படை வீரர் ஓட்டிச்சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

இதில், சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை மார்ச் 1ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்த நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் விளைவு மிக மோசமாக இருக்கும்  என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டிளித்தார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நிலையான மற்றும் தொடர்ச்சியான  நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிக்கக் கூடாது.

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாத அளவுக்கு தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விரும்புகின்றன.

 அவ்வாறு செய்யாவிட்டால் அது பாகிஸ்தானுக்கு விபரீதமான நிலைமையை உருவாக்கி விடும். சமீபகாலமாக தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் சில ஆரம்பக் கட்ட நடவடிக்ைகயை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: