×

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் நியமனம்

சென்னை: தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பதவிக்கு இன்று முதல் ஏப்ரல் 24ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மின்வாரிய அறிவிப்புக்கு மத்திய, மாநில மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்ைத விதிகள் அமலுக்கு வந்தது. அதன்பிறகு தமிழக மின்வாரியம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக, நிரந்தர பணிநியமனம், பதவி உயர்வு, பணிமாறுதல் போன்றவை அளிக்கக்கூடாது.

ஆனால் 5 ஆயிரம் கேங்மேன் என்ற புதிய பதவியை உருவாக்கி நிரப்புவதற்கான நடவடிக்கையை மின்வாரியம் வேகமாக எடுத்து வருகிறது. ஏப்ரல் 24ம் தேதி வரை கேங்மேன் பதவிக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதை அமுல்படுத்துவதற்கு வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்லாமல் ஒரு அரசியல் கட்சிக்கு வாக்காளர்களை வாக்களிக்க தூண்டுவதற்கான நடவடிக்கை ஆகும்.
எனவே தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் நடத்தை விதிகளுக்கு விரோதமாக கேங்மேன் என்ற பதவிக்கு பணிநியமனம் செய்ய உள்ளதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். தேர்தல்களுக்கு பின்னர் தொழிற் சங்கங்களோடு பேசி பணி நியமனத்திற்கான நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 5 thousand, gayman appointment,electoral force rather ,electoral rules
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...