×

தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்ததால் திமுக பிரமுகர் மீது தாக்குதல்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில், திமுக மாவட்ட நிர்வாகியை தாக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை கோரி திமுகவினர் காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். தமிழகத்தில் நாடாளுமன்றம் தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் 18ம் தேதி தேர்தல்  நடைபெற உள்ளது. இந்நிலையில், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு முத்தமிழ் நகரில் வாக்காளர்களிடம் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த திமுகவினர் மாவட்ட சிறுபாண்மை அணி அமைப்பாளர் சல்மான்பாய் தட்டி கேட்டதற்கு அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில்  முன்னாள் அதிமுக கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன்,  சல்மான் பாயை அடித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து திமுகவினர் கொடுங்கையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தேர்தல் அதிகாரியிடமும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 47வது தெருவை சேர்ந்த அதிமுக உறுப்பினர் நமச்சிவாயம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் அடையாள அட்டை வாங்கி உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : personnel ,DMK ,constituency ,Perambur , election, DMK, Perambur
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!