×

ஐபிஎல் போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை

இஸ்லாமாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவத் அகமது சவுத்ரி தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதல் இந்திய கிரிக்கெட்டிலும் எதிரொலித்தது. அதனால் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. அதனை தொடர்ந்து இரண்டு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐசிசி) தொடர்ந்து புகா்ர்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாளை தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபவத் அகமது சவுத்ரி, ‘‘இந்த முடிவுக்கு இந்தியாவின் நடவடிக்கைகள்தான் காரணம். ராணுவ தொப்பி அணிந்து விளையாடி விளையாட்டை அரசியலாக்கிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. மேலும் பாகிஸ்தானின் உள்ளூர் போட்டியான பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டிகளை அங்கு ஒளிபரப்பவில்லை. இந்தியா அரசு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் தான் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப தடை விதிக்க காரணம்’ என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,matches ,Pakistan , Pakistan, IPL matches
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?