×

ஐபிஎல் டிக்கெட் வசூல் புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி

சென்னை: புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு,  முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வசூலை சென்னை சூப்பர்கிங்ஸ்(சிஎஸ்கே) அணி வழங்க உள்ளது. ஐபிஎல் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான தொடக்க விழா பிரமாண்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு செலவிட இருந்த தொகை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 16ம் தேதி நடைப்பெற்றது. விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘இந்த தொகைக்கான காசோலையை இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட்டாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் டோனி வழங்குவார்’ என்றும் நிர்வாகம் கூறியுள்ளது. ‘டிக்கெட் விற்பனை மூலம் எவ்வளவு தொகை வசூலானது’ என்பது குறித்து விரைவில் தெரிவிப்போம் என்று அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,attack ,Pulwama ,families , IPL Ticket, Fund, Pulwama attack
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...