ஐபிஎல் அதிரடி திருவிழா

ஐபிஎல் போட்டியில் 12வது தொடர் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. இது வரை நடந்த 11 தொடர்களில் அணிகளின், வீரர்களின் சாதனைகளின் பட்டியல்:

அதிவேக 50!

பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 50 ரன்கள் குவித்ததே ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதமாகும். அடுத்த இடத்தில் கொல்கத்தா வீரர்கள் யுசுப் பதான், சுனில் நரைன் ஆகியோர் தலா 15 பந்துகளில் 50 ரன்களை எட்டியுள்ளனர். பெங்களூரின் கிறிஸ் கெயில், ஐதராபாத்தின் ஆடம் கில்கறிஸ்ட், டெல்லியின் கிறிஸ் மேரிஸ், மும்பையின் இஷான் கிஷன், பொலார்டு, கொல்கத்தாவின் சுனில் நரைன் ஆகியோர் தலா 17 பந்துகளில் 50 அடித்துள்ளனர்.

வேகமான சதம்

பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 30 பந்துகளில்  அதிரடியாக 100 ரன்களை எட்டியுள்ளார். பூனேவுக்கு எதிரான  அந்தப் போட்டியில் அவர்17 சிக்சர், 13 பவுண்டரிகள் விளாசி 175 ரன்களை குவித்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடங்களில்  ராஜஸ்தானுக்காக விளையாடிய யூசப் பதான் 37 பந்துகளிலும், பஞ்சாப் அணிக்காக விளையாடிய டேவில் மில்லர் 38 பந்துகளிலும் சதம் அடித்து சாதித்துள்ளனர்.

4 முறைக்கு மேல் விக்கெட் வீழ்த்தியவர்கள்

சுனில் நரைன்(கொல்கத்தா) 6முறையும், லசித் மலிங்கா(மும்பை)  4 முறையும்  4விக்கெட்கள் வீழ்த்தி முதல் 2 இடங்களில் உள்ளனர். பஞ்சாப் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி, ஆண்ரூ டை, சென்னையின் ரவீந்திர ஜடோ, டெல்லியின் அமீத் மிஸ்ரா ஆகியோர் தலா 3 முறை 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: