×

அசத்தல் அம்சங்களுடன் கிரேட் போர்டு எண்டோவர்

சென்னை:  போர்டு இந்தியா நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு  ‘கிரேட் ஃபோர்ட் எண்டோவர் டிரைவிங் அனுபவத்தை சென்னையில் வழங்கியது. இதன்மூலம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில், சதுப்பு நிலங்கள், நீரில் மூழ்கும்  நீர் உட்பட, சவாலான சாலைச் சூழல்களை சமாளிக்கும் பாதையில் பங்கேற்பாளர்கள் அனுபவம் பெற்றனர். ரூ.28.19 லட்சத்தில் தொடங்கும் 2019 எடிஷன் பிரீமியம் எஸ்யூவி, சிறந்த பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அளிக்கிறது.

போர்டின் இரண்டு ஃபன் டூ ட்ரைவ் மற்றும் என்ஜின்கள் செயல்திறன் சமரசமின்றி சிறந்த எரிபொருள் திறனையும் அளிக்கிறது. இதன் அதிகபட்ச ஆற்றல் சாகசங்களுக்கு உதவுகிறது. ஒரு எளிய மாறுபாடு வரிசையில், புதிய எண்டோவரானது 2.2L டைட்டானியம் மேனுவல் (ரூ.28.19 லட்சம்), 2.2L டைட்டானியம் + ஆட்டோமேட்டிக் (ரூ.30.60 லட்சம்), மற்றும் 3.2L டைட்டானியம் + ஆட்டோமேட்டிக் (ரூ.32.37 லட்சம்) என கிடைக்கிறது. ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் விலையில், 3 வருட அல்லது 100,000 கேஎம் உத்தரவாதம் உடன் வருகிறது என போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ford Endeavor
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...