×

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மபி.யில் கள்ளத் துப்பாக்கிகளுக்கு கிராக்கி

போபால்: மத்தியப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் சிக்கிலிகர் என்ற இன மக்கள் துப்பாக்கிகள் தயாரிப்பதில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் உள்ள காடுகள் மற்றும் மலைகளில் தங்கி நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது மக்களவை தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு இந்த துப்பாகிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும், விலையும் அதிகரித்திருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதுகுறித்து சிறப்பு படை போலீசார் கூறியதாவது: சிக்கிலிகர் இன மக்கள் தயாரிக்கும் பிஸ்டல் ரக துப்பாக்கிகள் முன்பு 6000க்கு விற்பனையாகி வந்தன. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த ரக துப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ரக துப்பாக்கிகள் மத்தியப் பிரதேச மாநிலத்திலேயே 10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. 8000க்கு விற்பனையாகி வந்த துப்பாக்கிகள் தற்போது 13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை போவது  தெரியவந்துள்ளது. 3 வாரத்தில் மட்டும் 250 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement , announcement, the mob , stripped of counterfeit guns
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...