மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் நீரிழிவு நோயாளிகளை சேர்க்கலாமா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரையை சேர்ந்த கேசவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்தியாவில் சர்க்கரை (நீரிழிவு) நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பரிசோதனை கருவி, ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வு அறைகளுக்கு எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கின்றனர். இவற்றை எடுத்துச்செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இம்மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ நிபுணர்கள் நேரில் ஆஜராகி, ‘‘சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளன. அவை தாமதமானால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும்’’ என தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், ‘‘இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் மொத்தம் எத்தனை நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்? அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள், டாக்டர்கள் தாலுகா மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ளதா? தேர்வுகளின்போது சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டர் பொருத்திச்செல்ல அனுமதிக்கலாமா? வருங்காலங்களில் போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வுகளை எழுதச்செல்லும் நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் மருந்துப்பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கலாமா? நீரிழிவு நோயாளிகள் அதிகரித்துவரும் சூழலில், இவர்களை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா’’ என கேள்விகளை எழுப்பி, மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு. ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: