இதுவரை 21 பேர் படிவங்களை பெற்றுச்சென்றனர் கன்னியாகுமரி தொகுதி வேட்புமனு தாக்கல் மந்தம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு 21 பேர் வேட்புமனு படிவங்களை பெற்றுச்சென்ற போதிலும் ஒருவரும் இதுவரை மனுத்தாக்கல் செய்யவில்லை. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. வரும் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 29ம் தேதி கடைசி நாளாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 முதல்நாளில் மொத்தம் 8 வேட்புமனு விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. நேற்றும் 13 பேர் வேட்புமனு படிவங்களை பெற்று சென்றனர். இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 21 பேர் வேட்புமனு படிவங்களை பெற்று சென்றுள்ளனர். ஆனால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தரவில்லை. நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைகின்ற வகையில் ஒரு வாசல் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. கூடுதல் கட்டிடம் அருகே உள்ள வாசல் திடீரென்று மூடப்பட்டுவிட்டது. ஒரு வாசல் வழியாக மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைபவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் வழியாகவே வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அங்கும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: