×

இடியாப்ப சிக்கலில் ஜெட் ஏர்வேஸ் : பங்குகளை விற்க துடிக்கும் எதிஹாட் நிறுவனம்

டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊதியம் தராததால் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் அறிவித்துள்ளனர். இத்துடன் ஜெட் ஏர்வேஸின் பங்குதாரரான வளைகுடா கேரியர் எதிஹாட் ஏர்வேஸ் தன்னுடைய பங்குகளை வாங்கி கொள்ளும்படி பாரத ஸ்டேட் வங்கியை கேட்டு கொண்டிருப்பது  நெருக்கடியை கூட்டியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீப காலமாக கடும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் பல விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது.

விமானிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஜெட் ஏர்வேஸ் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. நிலுவை ஊதியத்தை தரா விட்டால் ஏப்ரல் 1-ம் தேதியலிருந்து விமானங்களை இயக்கப் போவதில்லை என விமானிகள் அறிவித்துள்ளனர். இதனால் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போல ஊதியம் இல்லாமல் பணிபுரிவதால் விமானிகளுக்கு ஏற்பட்டுள்ள மனநிலை பாதிப்பு பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக கூடும் என அந்நிறுவன பொறியாளர்கள் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு கடிதம் எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான 24 சதவீத பங்குகளை வைத்துள்ள எதிஹாட் ஏர்வேஸ் மொத்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் மீள முடியாத இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அதன் தலைவர் நரேஷ் கோயல் 51 சதவீதப் பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jet Airways , Jet Airways, pilots struggle, pay outstanding
× RELATED ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் ரூ.538 கோடி சொத்து முடக்கம்: அமலாக்க துறை அதிரடி.