ஆன்ட்ராய்ட் செயல்பாட்டு முறையை சட்ட விரோதமாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்திற்கு ரூ.11, 643 கோடி அபராதம்

வாஷிங்டன் : ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.11, 643 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆண்ட்ராயிட் இயங்குதளம் போட்டி நிறுவனங்களின் விளம்பரங்களை தடை செய்வதாக 2009ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புகாரின் பேரில் 2016ம் ஆண்டு கூகுள் மீதான புகார்களை விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் குழு அமைத்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திற்கு ரூ.35 கோடி அபராதம் விதிக்கபப்ட்டது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதள நிறுவனம் கூகுள். இது இணையதளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆன்ட்ராய்ட் நிறுவனத்தின் செயல்பாட்டு முறையை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக 3 ஆண்டுகளுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ.35 கோடி அபராதமாக விதித்தது.

அதற்கு முந்தைய ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.18, 915 கோடி அபராதம் விதித்தது. இந்நிலையில் பிருசெல்ல்ஸ் நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 3வது முறையாக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: