நியூசிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக், அசால்ட் ரக துப்பாக்கிகளுக்கு தடை... பிரதமர் அறிவிப்பு

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக், அசால்ட் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் துப்பாக்கிகளுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார்.

முன்னதாக நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

மேலும் 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து நியூசிலாந்தில் செயல்பாட்டில் இருக்கும் ராணுவத்தில் உள்ளதை போன்ற செமி ஆட்டோமேட்டிக், அசால்ட் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த புதிய சட்டம் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: